கால் பந்து செம்பியன்ஷிப் தொடரின் இன்றைய போட்டியில்,எகிப்து அணி தண்டனை உதை வரிசையில் அவுஸ்திரேலியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
முழு நேர ஆட்ட முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் முடிந்ததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க நடுவர்களால் தண்டனை உதை வரிசை (Penalty Shootout) நடத்தப்பட்டது.
முன்னதாக போட்டியின் 13ஆவது நிமிடத்தில் எகிப்தின் இமாம் அஷூர் முதல் கோலை அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.
எனினும், ஆட்டத்தின் 55ஆவது நிமிடத்தில், எகிப்திய வீரர் முகமது ஹானி மூலமாக விழுந்த சொந்தக் கோல் (Own Goal), அவு ஸ்திரேலியாவுக்கு ஆட்டத்தைச் சமன் செய்யும் வாய்ப்பை வழங்கியது.
வழக்கமான ஆட்ட நேரத்தில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க தண்டனை உதை வாய்ப்பு (Penalty Shootout) வழங்கப்பட்டது.
அதில் எகிப்து அணி சார்பில் மஹ்மூத் சேபர், ராமி ராபியா, நட்சத்திர வீரர் முகமது சலா மற்றும் ஹொஸாம் அப்தெல்மகுயிட் ஆகியோர் தங்களது வாய்ப்புகளைத் துல்லியமாகக் கோல்களாக மாற்றினர்.
அவுஸ்திரேலியா சார்பில் ஜாக்சன் இர்வின் மற்றும் அவர் மாபில் மட்டுமே தங்களது வாய்ப்புகளைக் கோலாக மாற்றினர்.
அதேசமயம், ஹாரி சௌட்டர் மற்றும் லூகாஸ் ஹெரிங்டன் ஆகியோர் தங்களது வாய்ப்புகளைத் தவறவிட்டதால் அவுஸ்திரேலியா அணி கால்பந்தாட்ட செம்பியன்ஷிப் தொடரிலிருந்து வெளியேறியது.

