பிரான்சில் வாகனப் பழுதுபார்ப்பு செலவுகள் அதிகம்

பிரான்சில் வாகனப் பழுதுபார்ப்பு செலவுகள் அதிகம்:அதிரவைக்கும் 2026-இன் புதிய அறிக்கை!

வாகனத்தில் ஒரு சிறு விபத்தோ அல்லது கீறலோ விழுவது எப்போதுமே பெரும் மனவலியைத் தரும். ஆனால், அதைச் சரிசெய்வதற்காகப் பழுதுபார்க்கும் மையங்களுக்கு (Garages) செல்லும்போது கையில் கிடைக்கும் பற்றுச்சீட்டு அந்த வலியைப் பலமடங்காக அதிகரிக்கக் கூடும்! பிரான்சில் எந்தெந்த வாகனங்களைச் சரிசெய்ய அதிகப் பணம் செலவாகும் என்பது குறித்து SRA (Sécurité et réparation automobiles) அமைப்பு கடந்த ஜூன் மாதம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

 

ஆறு ஆண்டுகளுக்கும் குறைவான பழமையான வாகனங்களில் ஏற்பட்ட விபத்துகளை மட்டுமே இந்த ஆய்வு கருத்தில் கொண்டுள்ளது. இதன் படி, விபத்தில் சிக்கும் 74 விழுக்காடு வாகனங்கள் வெறும் 10 நிறுவனங்களைச் சேர்ந்தவை என்பது தெரியவந்துள்ளது:

 

சாலைகளில் அதிக அளவு பயன்பாட்டில் இருப்பதால், விபத்துகளின் பட்டியலிலும் Renault முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் Peugeot மற்றும் Citroën ஆகிய நிறுவனங்கள் உள்ளன. (ஒட்டுமொத்தமாக Stellantis குழுமம் முதலிடத்திலும், Renault குழுமம் இரண்டாம் இடத்திலும் உள்ளன).

 

Audi, BMW, Mercedes மற்றும் Volkswagen ஆகிய நான்கு ஜெர்மன் நிறுவனங்கள் மட்டும் 17 விழுக்காடு விபத்துகளைக் கொண்டுள்ளன.

 

பழுதுபார்ப்புச் செலவுகளைப் பொறுத்தவரை எல்லா வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை:

 

பழுதுபார்ப்பதற்கு அதிகச் செலவாகும் பொதுவான வாகனங்களின் பட்டியலில் மீண்டும் Renault நிறுவனமே முதலிடம் பிடித்துள்ளது. இந்த வாகனங்களைச் சரிசெய்யச் சராசரியை விட 2.3% அதிகச் செலவாகிறது. சொகுசு வாகனங்களான Audi, BMW, Mercedes ஆகியவையும் அதிகச் செலவு வைக்கும் பட்டியலில் உள்ளன.

 

மின்சார வாகனங்களைப் பொறுத்தவரை Tesla நிறுவனமே மிக அதிகச் செலவை வைக்கிறது. இவற்றைப் பழுதுபார்க்கச் சராசரியை விட 19.7% கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது!

 

Suzuki நிறுவனத்தின் வாகனங்களைப் பழுதுபார்ப்பது மிகக் குறைந்த செலவையே கோருகிறது. அடுத்தடுத்த இடங்களில் Fiat மற்றும் Dacia நிறுவனங்கள் உள்ளன.

 

இந்த அறிக்கை செலவுகளை இரண்டு விதமாகப் பிரித்துக் காட்டுகிறது:

 

Porsche மற்றும் Alpine போன்ற உயர்தர வாகனங்களுக்கு உதிரிபாகங்களின் விலையும், வேலையாட்களுக்கான கூலியும் மிக மிக அதிகம்.

 

மாறாக, Mazda, Fiat, Suzuki ஆகிய நிறுவனங்களுக்கு இவை இரண்டும் குறைவு.

 

Tesla வாகனங்களுக்கு உதிரிபாகங்களின் விலை ஓரளவிற்குக் குறைவாக இருந்தாலும், அதைப் பொருத்தும் வேலையாட்களுக்கான கூலி மிக அதிகம்!

 

Kia, DS, Hyundai வாகனங்களுக்கு உதிரிபாகங்களின் விலையை விடக் கூலி குறைவு எனத் தரவுகள் கூறுகின்றன.

 

குறிப்பிட்ட மொடல்களைப் பொறுத்தவரை பழுதுபார்க்க அதிகச் செலவாகும் வாகனங்கள்:

 

Minivan: Renault Espace V

 

Compact SUV: Hyundai Tucson IV

 

City car: Audi A1 II

 

2024 ஆம் ஆண்டில் 718 யூரோக்களாக இருந்த வாகனங்களைப் பழுதுபார்ப்பதற்கான சராசரிப் பழுதுபார்ப்புச் செலவு, 2025-ஆம் ஆண்டில் 764 யூரோக்களாக அதிகரித்துள்ளது என CarGarantie அமைப்பின் பகுப்பாய்வு எச்சரிக்கிறது. எனவே, இனி புதிய வாகனம் வாங்குவதற்கு முன்பாக, அதனைப் பராமரிப்பதற்கான செலவுகளையும் கவனத்தில் கொள்வது அவசியம்!

Recommended For You

About the Author: admin