உலகக்கிண்ணக் காற்பந்துத் தொடரிலிருந்து ஜெர்மனி அணி வெளியேறியுள்ள நிலையில், அந்த அணியின் நட்சத்திர கோல்காப்பாளர் மானுவல் நோயரின் (Manuel Neuer) உலகக்கிண்ணப் பயணமும் இத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.
தற்போது 40 வயதாகும் நோயர், கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெர்மனி அணியின் கோல் கம்பங்களைக் காத்து வந்துள்ளார். இதுவரை 5 உலகக்கிண்ணத் தொடர்களில் விளையாடியுள்ள அவர், சர்வதேச காற்பந்தாட்டத்தின் பிரம்மாண்ட மேடையிலிருந்து இப்போது விடைபெறுகிறார்.
மறுபுறம், பராகுவே அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க தகுதிபெறுகை கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நோயர் தனது கண்களில் வழியவிருந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறிய காட்சி, பார்ப்பவர்களின் நெஞ்சைக் கனக்கச் செய்தது என்பதை மறுக்க முடியாது.
அதுவே தனது இறுதி உலகக்கிண்ணப் போட்டி என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார்.
பலரைப் பொறுத்தவரை, காற்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த கோல்காப்பாளர் இவர்தான். கோல்காப்பாளர் என்றPosition-க்கு புதிய இலக்கணம் எழுதி, அதில் புரட்சியை ஏற்படுத்தியவர் நோயர். காற்பந்து உலகம் என்றும் மறக்காத ஒரு பெரும் மரபை அவர் விட்டுச் செல்கிறார்.
“முடிந்துவிட்டது என்று அழ வேண்டாம்; இப்படி ஒரு ஜாம்பவான் நமக்குக் கிடைத்தார் என்று புன்னகையோடு விடை கொடுப்போம்

