சொட்டிய இரத்தம்… கிழிந்த ஜெர்சி! மொராக்கோவை அடுத்த சுற்றுக்குக் கொண்டு சென்ற ‘ரத்த சரித்திரம்’ இஸ்மாயில் சைபாரி!

நெதர்லாந்து அணிக்கு எதிரான FIFA World Cup நாக்-அவுட் த்ரில்லர் போட்டியில், ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் தனது அசாத்திய வீரத்தால் மிரள வைத்துள்ளார் மொராக்கோவின் நட்சத்திர நடுகள வீரர் இஸ்மாயில் சைபாரி (Ismael Saibari)
ஆட்டத்தின் போது ஏற்பட்ட கடுமையான மோதலில், சைபாரியின் மூக்கு உடைந்து முகம் முழுவதும் இரத்தம் சொட்டச் சொட்ட அவர் மைதானத்தில் நின்ற காட்சி ரசிகர்களின் நெஞ்சைப் பதற வைத்தது.
உடனடியாக அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு, மூக்கில் பஞ்சு வைக்கப்பட்ட நிலையிலும், அவர் வலியைப் பொருட்படுத்தாமல் தனது நாட்டுக்காகத் தொடர்ந்து களத்தில் போராடினார்.
ஆட்டம் பெனால்டி ஷூட்அவுட்டிற்குச் சென்றபோது, ஒட்டுமொத்த மொராக்கோவின் விதியும் சைபாரியின் கால்களில் தான் இருந்தது. மரண அழுத்தத்திற்கு மத்தியிலும், அந்த வின்னிங் பெனால்டி கிக்கை (Winning Penalty) அசாத்தியமாக கோலாக மாற்றி மொராக்கோவிற்கு வரலாற்று வெற்றியைத் தேடித்தந்தார்!
கோல் அடித்த அடுத்த நொடி, தன் உடலில் இருந்த வலியையும், ரத்தக் கறையையும் மறந்து, ஆக்ரோஷத்தின் உச்சத்துக்கே சென்ற சைபாரி, தனது ஜெர்சியை அப்படியே இரண்டு துண்டாகக் கிழித்து எறிந்துவிட்டு மைதானத்தில் ஓடிக் கொண்டாடினார்.
சொந்த ரத்தத்தில் நனைந்து, பின் அதே ரத்தக் கறையுடன் வின்னிங் கோல் அடித்து, ஜெர்சியைக் கிழித்துக் கொண்டாடிய சைபாரியின் இந்த அசுரத்தனமான ஆட்டம், FIFA World Cup வரலாற்றின் ஆகச்சிறந்த வீரமிகு தருணமாக என்றென்றும் நினைவுகூரப்படும்!

Recommended For You

About the Author: admin