வலி வடக்கு காணி விவகாரம் பாதுகாப்பு அமைச்சில் எதிர்வரும் 25 ஆம் திகதி உயர்மட்ட கலந்துரையாடல்..

வலி வடக்கு காணி விவகாரம் பாதுகாப்பு அமைச்சில் எதிர்வரும் 25 ஆம் திகதி உயர்மட்ட கலந்துரையாடல்.. இறுதி முடிவு எட்ட ப்படும்
அமைச்சர் சந்திரசேகரன் நம்பிக்கை .

வலி வடக்கு காணிகள் விடுவிப்பு மற்றும் பலாலி விமான நிலையத்திற்கான காணி தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சில் உயர்மட்ட கலந்துரையாடல் எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெற உள்ளதாக கடத் தொழில் நீரியல் வள அமைச்சரும் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் வலி வடக்கு காணிகள் தொடர்பில் வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தெரிவிக்கையில் மக்களின் காணிகள் மக்களுக்கு என்பதுதான் எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு அதில் மாற்றுக் கருத்து இல்லை.

வலி வடக்கில் பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது அதற்கான நடவடிக்கைகளை எமது அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு அங்கமாக எதிர்வரும் 25 ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் பாதுகாப்பு அமைச்சில் உயர் மட்ட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அந்தக் கலந்துரையாடலில் பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிப்பதா அல்லது ஏற்கனவே இருக்கின்ற காணிகளுக்கான இழப்புட்டை வழங்கி முடிவுறுத்துவதா என்பது தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படும்.

அதேபோன்று வலி வடக்கில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது மற்றும் பொது மக்களின் காணிகளில் கட்டப்பட்டுள்ள இராணுவ வைத்தியசாலை தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு முடிவு எட்ட முடியும்.

அரசாங்கம் என்ற வகையில் பாதுகாப்பு தரப்பினரால் கையகப்படுத்தப்பட்ட பொது மக்களின் காணிகளை அவர்களிடமே ஒப்படைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

யாரும் எதிர்பாக்காத பலாலி வீதியை முழுமையாக எமது அரசாங்கம் திறந்து வைத்தது அதேபோன்று மக்களின் காணிகளையும் விரைவாக மக்களிடம் ஒப்படைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எமது அரசாங்கம் மேற்கொள்ளும் என அவர் மேலும் தெரிவித்தார்

Recommended For You

About the Author: admin