கொட்டகலையில் திருமண நிகழ்வில் இரு தரப்பினரிடையே மோதல்.!!

கொட்டகலையில் திருமண நிகழ்வில் இரு தரப்பினரிடையே மோதல்.!!

பொலிஸாரையும் புரட்டி எடுத்த மது பிரியர்கள் 7 பேர் கைது நுவரெலியா கொட்டகலை நகரில் இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டகலை நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றுக்குச் சென்றவர்களிடையே மோதல் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மோதலில்; ஈடுபட்ட 03 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இந்த நிலையில் மோதல் தொடர்பில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பிராந்தியத்துக்கு பொறுப்பான உதவி காவல்துறை அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் திம்புல பத்தன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: admin