நெதர்லாந்து – ஜப்பான் அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் முடிவு!

நெதர்லாந்து – ஜப்பான் அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் முடிவு!

கால்பந்து கிண்ணத் தொடரின் குழு நிலை போட்டியில், நெதர்லாந்து மற்றும் ஜப்பான் அணிகள் 2-2 என சமநிலை கண்டன.

விறுவிறுப்பாக நகர்ந்த போட்டியின் முதல் பாதி கோல்களின்றி நிறைவடைந்த நிலையில், இரண்டாவது பாதியின் 51ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் தலைவர் விர்ஜில் வான் டைக் முதலாவது கோலைப் பெற்றுக்கொடுத்தார்.

எனினும், 57ஆவது நிமிடத்தில் ஜப்பான் வீரர் கெயிட்டோ நகமுரா கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைப்படுத்தினார்.

தொடர்ந்து அதிரடி காட்டிய நெதர்லாந்து அணி, 64ஆவது நிமிடத்தில் கிரிசென்சியோ சம்மர்வில் அடித்த கோல் மூலம் மீண்டும் 2-1 என முன்னிலை பெற்றது.

நெதர்லாந்து வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியின் 88ஆவது நிமிடத்தில் ஜப்பான் வீரர் டாய்ச்சி காமடா தலையால் முட்டி அடித்த கோல் மூலம், ஆட்டம் 2-2 என மீண்டும் சமநிலையை எட்டியது.

இறுதிவரை இரு அணிகளும் மேலதிக கோல்களை அடிக்காததால் போட்டி சமநிலையில் முடிவடைந்து, புள்ளிகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

Recommended For You

About the Author: admin