அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர்ச் சூழலுக்கு மத்தியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஈரானுக்குச் சொந்தமான 10 பில்லியன் டாலர் (சுமார் 3.35 டிரில்லியன் இலங்கை ரூபாய்) முடக்கப்பட்ட நிதியை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இப்பிராந்தியத்தில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களைத் தடுக்கும் ஒரு தந்திரோபாய நடவடிக்கையாகவும், அமைதியை நிலைநாட்டும் முயற்சியாகவும் இந்த முடிவை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எடுத்துள்ளதாக நான்கு முக்கிய ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிதியில் முதற்கட்டமாக 3 பில்லியன் டாலர் (சுமார் 1 டிரில்லியன் இலங்கை ரூபாய்) ஏற்கனவே ஈரானுக்குக் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும், வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தைக் குறைத்து ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் வளைகுடா அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

