பாரிஸ் பயணிகளே அவதானம் ! ஜூன் 21 வரை RER, ட்ராம் மற்றும் புறநகர் தொடருந்துகளில் தொடரும் போக்குவரத்து முடக்கம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இல்-து-பிரான்ஸ் (Île-de-France) பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, வரும் ஜூன் 21 (ஞாயிற்றுக்கிழமை) வரை பல முக்கிய தொடருந்து மற்றும் ட்ராம் (Tramway) சேவைகளில் தடங்கல்கள் ஏற்படவுள்ளன.
குறிப்பாக இரவு நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் தொடருந்துகள் ரத்து செய்யப்பட உள்ளதால், பயணிகளின் வசதிக்காகப் பெரும்பாலான தடங்களில் மாற்றுப் பேருந்துகள் (Bus de remplacement) இயக்கப்பட உள்ளன. முழுமையான விவரங்கள் இதோ:
RER தொடருந்து சேவைகள்
RER A: Cergy-Le Haut மற்றும் Maisons-Laffitte / Nanterre-Préfecture ஆகிய நிலையங்களுக்கு இடையே இரவு நேரங்களிலும் (21:50-க்குப் பின்), வார இறுதி நாட்களிலும் ஜூலை மாதம் வரை ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
RER B: ஜூன் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் (வார இறுதி) Aulnay-sous-Bois – Mitry-Claye இடையே சேவை இருக்காது. மேலும், Châtelet-லிருந்து விமான நிலையம் (CDG 2) செல்லும் மார்க்கத்தில் இரவு 22:45 மணிக்குப் பின் ஜூலை 7 வரை சேவை நிறுத்தப்படும்.
RER C (கடுமையான பாதிப்பு): இந்த வாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் மார்க்கம் இதுவே. Juvisy, Paris Austerlitz, Versailles Château, Invalides மற்றும் Dourdan உள்ளிட்ட பல வழித்தடங்களில் இரவு மற்றும் வார இறுதி நேரச் சேவைகள்
முழுமையாக நிறுத்தப்பட்டு மாற்றுப் பேருந்துகள் இயக்கப்படும்.
RER D: Melun மற்றும் Combs-la-Ville இடையே பாதி தொடருந்துகள் மட்டுமே இயங்கும். Malesherbes – Corbeil-Essonnes மற்றும் பாரிஸ் வடக்கு நிலையம் (Gare du Nord) – Creil தடங்களில் இரவு நேரச் சேவைகள் முடக்கப்படும்.
RER E: Nanterre-la-Folie இலிருந்து Chelles – Gournay, Villiers-sur-Marne மற்றும் Tournan செல்லும் வழிகளில் இரவு 22:30 மணிக்குப் பின் பராமரிப்புப் பணிகள் காரணமாகப் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.
டிரான்சிலியன் புறநகர் ரயில்கள் (Transiliens)
H, J, K, L, N, P, R, U ஆகிய அனைத்துப் புறநகர் ரயில் வழித்தடங்களிலும் பராமரிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் காரணமாக:
ஜூன் 26 அல்லது ஜூலை மாதம் வரை, பெரும்பாலான வழித்தடங்களில் வார நாட்களில் இரவு 21:00 அல்லது 22:00 மணிக்கு மேல் தொடருந்துகள் முழுமையாக நிறுத்தப்படுகின்றன.
பாரிஸ் Saint-Lazare, Montparnasse மற்றும் Paris Est ஆகிய முக்கிய நிலையங்களிலிருந்து புறப்படும் இரவு நேரப் பயணங்களுக்குப் பயணிகள் கட்டாயம் மாற்றுப் பேருந்துகளையே நம்பியிருக்க வேண்டும்.
Line K, L மற்றும் R வழித்தடங்களில் ஜூன் 13, 14 வார இறுதி நாட்களிலும் பகல் நேரச் சேவை துண்டிக்கப்படும்.
ட்ராம் சேவைகள் (Tramways)
T1: Asnières – Quatre Routes மற்றும் Gare de Saint-Denis இடையிலான போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 மே மாதம் பாலம் ஒன்றின் மீது படகு மோதியதால் ஏற்பட்ட சேதத்தைச் சீரமைக்கும் பணி நடப்பதால், 2026 கோடைகாலத்தின் இறுதி வரை இங்கு ட்ராம் இயங்காது. மேலும், Noisy-le-Sec – Bobigny இடையே ஆகஸ்ட் 31 வரை சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
T4: Gargan மற்றும் Aulnay-sous-Bois இடையே ஜூலை 17 வரை வார நாட்களில் இரவு 9:15 மணிக்குப் பின் சேவை இருக்காது.
T13: ஜூன் 12 வரை முழு வழித்தடத்திலும் இரவு 10 மணிக்கு மேல் போக்குவரத்து நிறுத்தப்படும்.
(குறிப்பு: பயணிகள் தங்களது பயணத்தைத் தொடங்குவதற்கு முன் SNCF அல்லது RATP அதிகாரப்பூர்வ தளங்கள் மற்றும் செயலிகளில் தற்போதைய போக்குவரத்து நிலவரத்தைச் சரிபார்த்துச் செல்வது சிரமங்களைத் தவிர்க்க உதவும்.)

Recommended For You

About the Author: admin