மின்சாரம் தாக்கி 23 வயது இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி – நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகமொன்றில் இன்று காலை இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தொழிலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த வேளையில் இளைஞர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் கிளிநொச்சி நகரைச் சேர்ந்த 23 வயதுடைய சிவகுருநாதன் சாரங்கன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin