இஸ்ரேலியப் பிரதமரின் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு புற்று நோய் ?

இஸ்ரேலியப் பிரதமரின் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு புற்று நோய் ?

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்குச் சிறுநீரகச் சுரப்பி (Prostate) புற்றுநோய் பாதிப்பு இருந்ததையும், அதற்காக அவர் கடந்த இரண்டரை மாதங்களாக ரகசியமாகச் சிகிச்சை பெற்று வந்ததையும் இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

76 வயதாகும் நெதன்யாகு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அவருக்கு, இரண்டரை மாதங்களுக்கு முன்பு ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான அளவில் ஒரு சிறிய புற்றுநோய் துகள் (Tumor) இருப்பது கண்டறியப்பட்டது.

உடனடியாக அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்ட அவர், அதனை உலகிற்குத் தெரியாமல் ரகசியமாக வைத்திருந்தார். தற்போது அவரது ரத்தப் பரிசோதனைகள் அனைத்தும் சீராக இருப்பதாகவும், அவர் முழுமையாகக் குணமடைந்துவிட்டதாகவும் அவரது மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

“போரின் மிக முக்கியமான நேரத்தில், இஸ்ரேலுக்கு எதிரான தவறான பரப்புரைகளைத் தவிர்க்கவே இந்தத் தகவலை இரண்டு மாதங்கள் தள்ளி வெளியிட உத்தரவிட்டேன்,” என நெதன்யாகு தெரிவித்துள்ளார்

75-வயதைக் கடந்த நெதன்யாகு, “நான் ஒரு நாளைக்கு 18 மணிநேரம் உழைக்கிறேன்” என்றும், சுருட்டுப் பிடித்துக் கொண்டு போர்க்களங்களைப் பார்வையிடும் புகைப்படங்களையும் வெளியிட்டுத் தனது பிம்பத்தைத் தக்கவைக்க முயல்கிறார்.

இருப்பினும், அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறுவது வேறு:

குடல் இறக்க (Hernia) அறுவை சிகிச்சை, நீர்ச்சத்து குறைபாடு (Dehydration), மற்றும் தற்போதைய புற்றுநோய் சிகிச்சை என அவரது உடல்நிலை பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறது.

Recommended For You

About the Author: admin