கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரன் வரலாற்றுச் சாதனை – வட மாகாண ஆளுநர் நேரில் சந்தித்து பாராட்டு கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரன், 2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இம்மாணவனையும், உயிரியல் மற்றும் வர்த்தகப் பிரிவுகளில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற ஆ.கிரிஷாந்த் மற்றும் க.மதுமினி ஆகியோரையும் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து மாணவர் ஒருவர் தேசிய நிலையில் முதலிடம் பெற்றமை மாகாணக் கல்வி வரலாற்றின் புதிய அத்தியாயம் எனப் பாராட்டிய ஆளுநர், இம்மாணவர்கள் ஏனையோருக்குச் சிறந்த முன்மாதிரிகள் எனவும் குறிப்பிட்டார்.


