நல்லூர் கைலாசநாத பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா நல்லூர் கைலாசநாத பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆலயத்தில் அதிகாலை 4.00மணி தொடக்கம் வழிபாடுகள் ஆரம்பமாகி, பரிவார யாகசாலைகளில் 10ஆம் கால யாகபூஜை நிறைவு பெற்று, தொடர்ந்து விநாயகர், சிவன், அம்பாள் யாகசாலை உபசார பூஜையுடன் பிரதான கும்பங்கள் வீதியுலா கொண்டுவரப்பட்டு தூபிகள் அபிஷேகிக்கப்பட்டதும் கைலாச விநாயகர், கைலைநாயகி சமேத கைலாசநாதர், பஞ்சமுக கணபதி, ஸ்கந்தப்பெருமான் உள்ளிட்ட அனைத்து மூர்த்திகளுக்கும் மகாகும்பாபிஷேகம் நிகழ்ந்தது.
தொடர்ந்து தசதர்சனம், ஆசீர்வாதம் என்பனவும் இடம்பெற்றன.


