Fitness App (உடற்பயிற்சி செயலி) மூலம் வெளிச்சத்துக்கு வந்த பிரான்ஸ் போர்க்கப்பல் இருப்பிடம்
ஒரு சாதாரண உடற்பயிற்சி பதிவு பெரிய பாதுகாப்பு பிரச்சினையாக மாறிய சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரான்ஸ் கடற்படை அதிகாரி ஒருவர் தனது தினசரி ஓட்டப் பயிற்சியை Strava என்ற உடற்பயிற்சி செயலியில் பதிவு செய்து, அதை வெளிப்படையாக பகிர்ந்திருந்தார்.
இந்த பதிவில் உள்ள GPS தகவல்களை ஆய்வு செய்த Le Monde, அந்த ஓட்டம் நடந்த இடம் சாதாரண பகுதி அல்ல என்று கண்டுபிடித்தது. அது பிரான்ஸின் முக்கியமான விமான தாங்கி போர் கப்பல் ஆன Charles de Gaulle aircraft carrier மேல் நடந்தது என்பது உறுதியாகியது.
இந்த தகவலை வைத்து, அந்த போர்க்கப்பல் Mediterranean கடலில், குறிப்பாக Cyprus அருகே இருந்தது என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது. பின்னர் செயற்கைக்கோள் படங்களாலும் இது உறுதிசெய்யப்பட்டது.
இதனால், இந்த சம்பவம் ஒரு பெரிய பாதுகாப்பு குறைபாடாக பார்க்கப்படுகிறது. ஒரு ராணுவ கப்பலின் துல்லியமான இருப்பிடம் வெளியேறுவது, எதிரிகளுக்கு தாக்குதல் நடத்த உதவக்கூடிய ஆபத்தான விஷயமாகும்.
இதுபோன்ற நிகழ்வுகள் இதற்கு முன்பும் நடந்துள்ளன. Fitness apps மூலம் ராணுவ மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் வெளியான சம்பவங்கள் பல முறை பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து, பிரான்ஸ் அரசு “digital hygiene” எனப்படும் ஆன்லைன் பாதுகாப்பு பழக்கங்களின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இணையத்தில் பகிரப்படும் தகவல்கள் அதாவது சாதாரண உடற்பயிற்சி பதிவுகள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதே இந்த சம்பவத்தின் முக்கிய பாடமாகும்.
உங்கள் தனிப்பட்ட விடயங்களை உங்களுக்கு எதிரானவர்கள் ஆபத்தானதாக உருவாக்கிவிடமுடியும் உங்களது பகிர்வுகளில் கவனம் இருக்கட்டும்.

