இஸ்ரேல் பென் குரியன் விமான நிலையம் ஏப்ரல் 16 வரை மூடல்!

இஸ்ரேல் பென் குரியன் விமான நிலையம் ஏப்ரல் 16 வரை மூடல்!

ஈரான், ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையிலான பிராந்திய பதற்றம் மற்றும் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் (Ben Gurion) சர்வதேச விமான நிலையம் மற்றும் அதன் வான்வெளி கட்டுப்பாடுகள் வரும் ஏப்ரல் 16 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக இஸ்ரேலிய போக்குவரத்து அமைச்சகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

 

பாதுகாப்புச் சூழலை ஆய்வு செய்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கும், இஸ்ரேல் – அமெரிக்கக் கூட்டுப் படைகளுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல்கள், குறிப்பாக பென் குரியன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மத்திய இஸ்ரேல் பகுதிகளில் விழுந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் இந்தத் தடையை உறுதிப்படுத்தியுள்ளன.

 

📢 இதனையடுத்து சிவில் விமானப் போக்குவரத்து அனைத்தும் ஏப்ரல் 16 வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், பாதுகாப்புச் சூழல் மேம்பட்டால் இந்தத் திகதிக்கு முன்னதாகவே சேவைகள் தொடங்கப்படலாம் அல்லது நிலைமை மோசமடைந்தால் மேலும் நீட்டிக்கப்படலாம்.

 

வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு அழுத்தம்: ஏப்ரல் மாதத்திற்கான பயணத் திட்டங்களை இன்னும் ரத்து செய்யாத வெளிநாட்டு விமான நிறுவனங்கள், தங்களின் நிலப்பாட்டைத் தெளிவாக அறிவிக்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது. இது பயணிகளின் குழப்பத்தைத் தவிர்க்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியப் பயணிகள் வெளிநாடுகளில் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். இது ஒரு பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கை என்பதால், அவர்களுக்கு அரசாங்கத்தினால் எவ்வித நிதி இழப்பீடும் வழங்கப்படாது என போக்குவரத்து அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 

இராணுவ விமானங்கள் மற்றும் மிக அத்தியாவசியமான வெளியேற்ற (Evacuation) விமானங்கள் மட்டுமே பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அனுமதிக்கப்படுகின்றன. ஏனைய வணிக ரீதியான போக்குவரத்துகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin