ஈரான் அதிபரை காட்டி கொடுத்த ‘சீனா’ கேமராக்கள்.. 1234 பாஸ்வேர்டு!!!
அலி கமேனியை குறிவைத்த இஸ்ரேலின் அதிரடி ஹேக்கிங்..!!
உச்ச தலைவர் அலி கமேனியின் நடமாட்டங்களைக் கண்காணிக்க, அந்நாட்டின் சொந்தக் கண்காணிப்பு கேமராக்களையே இஸ்ரேல் ஹேக் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெஹ்ரான் நகரின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு கேமராக்களில் உள்ள பலவீனமான கடவுச்சொற்கள் மற்றும் காலாவதியான மென்பொருள்களைப் பயன்படுத்தி, இஸ்ரேலிய உளவுப்படை கமேனியின் இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு விவரங்களைத் திரட்டியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன், ஆயிரக்கணக்கான கேமராக்களின் காட்சிகளை நொடிப்பொழுதில் ஆய்வு செய்து, ஒரு குறிப்பிட்ட நபர் எங்கு செல்கிறார் என்பதை மிகத் துல்லியமாகக் கண்டறிய முடியும் என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது.
ஒரு காலத்தில் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள், இன்று நவீனப் போர்க்கருவிகளாக மாறியுள்ளன. ஈரான் தனது நாட்டுப் போராட்டக்காரர்களைக் கண்காணிக்க நிறுவிய ஆயிரக்கணக்கான சீனத் தயாரிப்பு கேமராக்களே, தற்போது அந்நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்துவிட்டன.
இதேபோன்ற சைபர் தாக்குதல்கள் ரஷ்யா-உக்ரைன் மற்றும் ஹமாஸ்-இஸ்ரேல் போர்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் நூறு கோடிக்கும் அதிகமான கேமராக்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாத எந்தவொரு நாட்டின் கேமராவும் அந்த நாட்டுக்கே எதிரியாக மாறக்கூடும் என்று சைபர் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

