நடிகர் என் நகையை ஏமாற்றி விட்டார்…

நடிகர் என் நகையை ஏமாற்றி விட்டார்…

பிக் பாஸ் தாமரை செல்வி கண்ணீர் வீடியோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீருடன் இரண்டு வீடியோக்களை அடுத்தடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

 

இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தான் ஒருவருக்கு உதவி செய்த நிலையில் அந்த நடிகர் தன்னுடைய நகைகளை ஏமாற்றிவிட்டார் என்று அதில் குற்றசாட்டு வைத்திருக்கிறார்.

 

 

 

பிக் பாஸ் தாமரை செல்வி

 

எல்லோருடைய வாழ்க்கையும் எப்போது எப்படி மாறும் என்று சொல்ல முடியாது. அது போலத்தான் பிக்பாஸ் தாமரை செல்வியின் வாழ்க்கையும் மாறி இருந்தது. சில வருடங்களுக்கு முன்புவரைக்கும் கோவில் திருவிழாக்களில் மேடைகளில் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த தாமரை செல்விக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது.

 

இவருடைய வெகுளித்தனமான பேச்சு வழக்கு பலரையும் மனம் கவர்ந்தது. அதன் காரணமாகவே அந்த நிகழ்ச்சியில் அதிக நாட்கள் இருந்தார். எந்த பின்புலமும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக நாட்கள் இருந்த பிரபலங்களில் தாமரை செல்வியும் ஒருவர். ஆனால் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு காரணமே தனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதாபாஸ்

 

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததுமே விஜய் டிவியில் சின்ன மருமகள் சீரியலில் ஹீரோயினியின் அம்மா கேரக்டர் கிடைத்தது. தான் நடிக்கும் முதல் சீரியலில் தனக்கு அம்மா கேரக்டர் என்றாலும் அதை அசராமல் தாமரை செல்வியும் செய்து வந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு திடீரென அந்த சீரியலில் இருந்து அவர் விலக்கப்பட்டிருந்தார்.

 

அது குறித்து கூட தாமரை செல்வி உருக்கமான வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். சிலருடைய தலையீடு காரணமாக தான் இந்த சீரியலில் இருந்து திடீரென விலக்கப்பட்டேன் என்று சொல்லியிருந்தார். ஆனால் என்னை எதற்காக விலக்கினார்கள் என்று கூட எனக்கு தெரியவில்லை என்று பேசி இருந்தார். அந்த பஞ்சாயத்து முடிவடைவதற்குள் இப்போது இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

 

அதில் தாமரை செல்வி பேசும் போது, சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் ஸ்வேதாவின் கணவர் ஆதி என்பவர் மீது பல குற்றச்சாட்டுகளும், புகார்களும் இருக்கிறது. ஆனால் அவர் நான் எந்த தப்பும் செய்யவில்லை என் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாம் சூழ்ச்சிகள் தான் என்றெல்லாம் சொன்னார். நானும் அதை உண்மை என்று நம்பி இருந்தேன்.

 

சில வாரங்களுக்கு முன்பு எங்கள் வீட்டிலேயே சில நாட்கள் தங்கி இருந்தாய். என்னுடைய சொந்த தம்பி போல தான் பார்த்தேன். அதனால் அவருக்கு ஒரு பிரச்சனை என்றதும் என்னுடைய மூன்று பவுன் செயினை கொடுத்து அதை அடகு வைத்து பணத்தை எடுத்துக்கொள்ள சொன்னேன். நாங்கள் வசிக்கும் பக்கத்தில் நகைக்கு குறைவான பணம் கொடுப்பதால் அவர் வசிக்கும் பக்கத்து தெருவில் அடகு வைக்கலாம் என்று சொன்னாரு.

 

நானும் அவர் பெயரில் நம்பிக்கையாக அடகு வைத்தேன். ஆனால் அந்த நகையை இரண்டு நாளில் திருப்பி அதை விற்றிருக்கிறார். என் வீட்டில் இருந்தபடியே இந்த வேலையெல்லாம் செய்திருக்கிறார். இது எனக்கு தெரியாது. என்னுடைய நகையை விற்ற பணத்தில் தான் சில நாட்களுக்கு முன்பு அவர் பல பெண்களுக்கு உதவி செய்வது போல பணம் கொடுத்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.

 

அது எல்லாமே என் பணம் என்பது எனக்கு இப்போது தான் தெரிகிறது. ஆதி மீது நான் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறேன் என்று தாமரை செல்வி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதற்கு ஆதி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் சில வீடியோக்கள் என்னை பற்றி பரவி வருகிறது, அது உண்மை கிடையாது… கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று இன்ஸ்டால் ஸ்டோரி இருந்திருந்தார்.

 

அதை குறிப்பிட்டு மீண்டும் தாமரை செல்வி இன்னொரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் நான் உன்னை எவ்வளவு நம்பினேன், ஆனால் நீ இப்படி எல்லாம் ஏமாற்றி இருப்பானு எனக்கு தெரியாது. இப்போ என்னுடைய நகை என்னிடம் வரும் வரைக்கும் நான் உன்னை சும்மா விடமாட்டேன். இதுபோல வீடியோ வெளியிட்டுக் கொண்டே இருப்பேன். உன் மீது நான் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறேன் அதற்கு முறையாக விசாரணைக்கு வராமல் உன்னை பற்றி பேசுவது பொய் என்று சொல்லுறியே என்று அந்த வீடியோவிலும் திட்டி இருக்கிறார்.

 

ஏற்கனவே இந்த ஆதி சில நாட்களுக்கு முன்பு சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதாவின் கணவர் நான்தான், ஆனால் இப்போது அவர் என்னை யார் என்றே தெரியாதுன்னு சொல்கிறார். அவரை பற்றிய பல ஆதாரங்கள் என்கிட்ட இருக்கு. அவர் பலபேரை ஏமாற்றி இருக்கிறார். இப்போ என்னையும் ஏமாற்றி விட்டார் நான் அந்த ஆதாரங்களை எல்லாம் வெளியிட போறேன் என்று கூட பேட்டிகளில் பேசி இருந்தார். ஆதி பற்றிய சர்ச்சைகள் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது பிக் பாஸ் தாமரை செல்வியிடமும் சிக்கி இருக்கிறார்.

Recommended For You

About the Author: admin