திருக்கோவிலூரில் 18-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு: ஜீயரின் தர்மமா? – ஆய்வாளர்கள் தகவல்
திருக்கோவிலூரில், தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள ஜீயர் சமாதிகளுக்கு அருகில் 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அபூர்வ கல்வெட்டு மற்றும் மருத்துவக் குழி கண்டறியப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் கல்வெட்டு ஆய்வாளர் சிங்கார உதியன் தலைமையிலான குழுவினர் இதனை ஆய்வு செய்தனர். “வீரராகவ ஐயர் தர்மம்”>
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவலூரில், தென்பெண்ணையாற்றங்கரையில், ஜீயர்கள் சமாதியின் அருகில் வெட்டப்பட்டிருந்த பாறைக்கல்வெட்டை கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவரும் கல்வெட்டு ஆய்வாளருமான சிங்கார உதியன் தலைமையில், ஆய்வாளர்கள் வீரராகவன், இமானுவேல், சு.சுந்தர், மு. அன்பழகன், கவிநிலவன் ஆகியோர் கண்டுபிடித்து ஆய்வு செய்தனர்.
இப்பாறைக்கல்வெட்டு 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும், இக்கல்வெட்டு மூன்று வரிகளைக் கொண்டது. வீ ராகவை ஐயர் தர்மம் … என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதற்குக் கீழே மருந்து அரைக்கப் பயன்படும் குழியை அமைத்து, இவர் பெயரில் தர்மம் என்று வெட்டி வைத்துள்ளனர்.
இந்த மருத்துவக்குழி பாறைக்கு அருகில் ஜியர் சமாதிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 15-ம் நூற்றாண்டிலிருந்து ஜீயர் சமாதி உள்ளது, 18-ம் பட்டம் ஜீயர் பெயர் வீரராகவ ஐயர் என்பதாகும், இவர் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவருடைய தர்மமாகவும் கூட இருக்கலாம் என்று ஆய்வு செய்கிறோம். தற்போது உள்ள ஜீயர் சுவாமிகள் 26 ஆம் பட்டம் என்று தெரிவித்தனர்.

