ரயில் படியில் தொங்கியபடி ரீல்ஸ் எடுத்த இளைஞர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி!
ஊடகங்களில் உதவியால் நம்மை சுற்றி நடைபெறும் சில முக்கிய மற்றும் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும்.
அந்த வகையில், இளைஞர் ஒருவர் ரயில் படியில் நின்று ரீல்ஸ் எடுத்த நிலையில் கம்பத்தில் மோதி கீழே விழும் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்த இளைஞரின் இந்த வீடியோ பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரயில் படியில் தொங்கியபடி ரீல்ஸ் எடுத்த இளைஞர்
தற்போதைய இளைய சமூகத்தினர் மத்தியில் சமூக ஊடக பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் அதிகரித்து காணப்படுகிறது. இதற்காக அவர்கள் பல ஆபத்தான செயல்களை செய்ய கூட தயங்குவதில்லை.
அவ்வாறு ரீல்ஸ் எடுக்க ஆபத்தான முறையை கையாண்டு உயிர் இழந்தவர்களும் உள்ளனர். அந்த வகையில். இளைஞர் ஒருவர் ரயிலில் தொங்கியபடி ரீல்ஸ் எடுத்தபோது கம்பத்தில் மோதி கீழே விழும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது

