ஈரானின் தாக்குதலில் இருந்து தப்பிக்க சீன அடையாளத்தைப் பயன்படுத்தும் கப்பல்கள்!

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலில், ஈரானின் தாக்குதல்களுக்கு இலக்காவதைத் தவிர்க்க சில சரக்குக் கப்பல்கள் வினோதமான மற்றும் தந்திரோபாயமான ஒரு முறையைக் கையாண்டு வருகின்றன.

வளைகுடா கடற்பரப்பில் பயணிக்கும் சில கப்பல்கள், தங்களது தானியங்கி அடையாள அமைப்பில் (Transponder) உள்ள தகவல்களை வேண்டுமென்றே மாற்றியமைத்துள்ளன.

அக்கப்பல்கள் தங்களைச் சீனாவோடு தொடர்புடையவை எனக் காட்டிக்கொள்ள “சீன உரிமையாளர்” (Chinese Owner), “அனைவரும் சீன ஊழியர்கள்” (All Chinese Crew) அல்லது “சீன ஊழியர்கள் கப்பலில் உள்ளனர்” (Chinese Crew Onboard) போன்ற செய்திகளைத் தங்களது அடையாளக் குறியீடுகளாகப் பதிவிட்டுள்ளன.

ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் சீனாவோடு நெருக்கமான இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவைக் கொண்டுள்ளன. எனவே, சீன அடையாளத்துடன் பயணிக்கும் கப்பல்கள் தாக்கப்படாது என்ற நம்பிக்கையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin