இன்ஸ்டாவில் போஸ்ட் போட்ட அபிஷேக் ஷர்மா.. கமெண்டில் செருப்பு இமோஜி அனுப்பிய யுவராஜ் சிங்.

T20 உலகக்கோப்பை. இன்ஸ்டாவில் போஸ்ட் போட்ட அபிஷேக் ஷர்மா.. கமெண்டில் செருப்பு இமோஜி அனுப்பிய யுவராஜ் சிங். வைரலாகும் பதிவு.!!!

நடைபெற்று வரும் T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி பட்டத்தைத் தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது

 

இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா கடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் அடித்துத் தனது திறமையை நிரூபித்த போதிலும் அவரது ஆட்டத்திறன் குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

 

இந்தச் சூழலில் அபிஷேக் சர்மாவின் ஆட்டம் குறித்து அவரது வழிகாட்டியும் முன்னாள் நட்சத்திர வீரருமான யுவராஜ் சிங் சமூக வலைதளத்தில் பதிவிட்ட செருப்பு சின்னம் இணையதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. அபிஷேக் சர்மா ஆட்டமிழந்த விதம் குறித்துக் கிண்டலாகப் பதிவிட்டுள்ள யுவராஜ் சிங் சிலருக்கு அடி கொடுத்தால் தான் புத்தி வரும் என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்தச் செருப்பு சின்னம் தொடர்பான நகைச்சுவைக்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான காரணம் மறைந்துள்ளது. அபிஷேக் சர்மாவின் ஆரம்பகாலப் பயிற்சிக் காலத்தில் அவரது ஒழுக்கத்தைக் கட்டுப்படுத்த யுவராஜ் சிங் இத்தகைய கண்டிப்பான முறைகளைக் கையாண்டதாக அவரது தந்தை யோகராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

 

அடங்காத குதிரைகளை அதன் பிடரியைப் பிடித்து அடக்குவது போல இளம் வீரர்களை நல்வழிப்படுத்தச் சில நேரங்களில் இத்தகைய கண்டிப்பு தேவைப்படுவதாக அவர் விளக்கியுள்ளார். தற்போது ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வரும் அபிஷேக் சர்மா மற்றும் யுவராஜ் சிங் இடையிலான இந்த ஆசிரியர் மாணவர் உறவு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin