ஈரானை பாத்தா அவ்வளவு சாதாரணமா தெரியல அடிக்கிறது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆனா ஈரான் அடி பெரும்பாலும் வளைகுடா நாடுகள் மேல தான் இருக்கு
என்ன தான் ஈரான் பயலுவ இஸ்லாம் மதமாக இருந்தாலும் அதில் ஒரு பிரிவான ஷியாவாக இருந்தாலும் அரபு நாடுகளை தாக்குவது உண்மையில் அமெரிக்க ராணுவ நிலைகளுக்காக மட்டுமான்னு பார்த்தா அது மட்டும் தான் காரணமானு தெரியல
24 மணி நேரத்தில் 170 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தகவல்
அரபு நாடுகள் மீதான தாக்குதல் என்ன செய்தது ?
கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 13% உயர்ந்து $82/பேரல்
தங்க விலை $5,300/அவுன்ஸை கடந்தது.
உலக எண்ணெய் போக்குவரத்தின் 20% நடைபெறும் ஹோர்முஸ் நீரிணை பாதிப்பு.
வளைகுடா நாடுகளில் விமான சேவைகள் நிறுத்தம்.
இப்பவே இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் எண்ணெய் தட்டுபாடு உலகிலேயே பிசியான விமான நிலையமான துபாய் விமான நிலையம் மூடல் பெரிய பணக்கார நாடுகளை தாக்கிட்டு இருக்கான் இதனால் ஆகும் விளைவு ? உலக பொருளாதாரம் ஆட்டம் காணும் அது அமெரிக்காவுக்கு எதிராக ஒரு அழுத்தம் தான் தரும்.
ஒருவேளை ஈரான் போரில் தோற்றாலும் அவனுங்க சும்மா இருக்க மாட்டாங்க ஏன்னா இராணுவத்தை விட அங்க வலிமையான இஸ்லாமிய புரட்சிகர படை இருக்கானுங்க இந்த மாதிரி நிலை ஒரு நாள் கண்டிப்பா வரும்ன்னு அதை சரிசெய்ய ஒரு திட்டத்தோடு தயாராக தான் இருப்பாங்கன்னு தோணுது அவனுங்க எதிர்ப்பது வல்லரசு நாட்டை.

