குடும்ப கொடுப்பனவுகள் மார்ச் 1, 2026 முதல் புதிய விதிகள் நடைமுறையில்
பிரான்சில் குடும்ப கொடுப்பனவுகளை கணக்கிடும் விதிகளில் முக்கியமான மாற்றம் 2026 மார்ச் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
குறிப்பாக, குழந்தைகளுக்கான வயது சார்ந்த கூடுதல் தொகை (majoration) வழங்கப்படும் வயதில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
இதுவரை, ஒரு குடும்பத்தில் குறைந்தது இரண்டு சார்புடைய குழந்தைகள் இருந்தால், இரண்டாவது குழந்தை 14 வயதை அடைந்தவுடன் மாதாந்திர குடும்ப கொடுப்பனவில் கூடுதல் தொகை வழங்கப்பட்டது.
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களில், மூத்த குழந்தை 14 வயதை அடைந்ததும் இந்த கூடுதல் தொகை வழங்கப்பட்டு, பின்னர் அந்த வயதை எட்டும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த உயர்வு வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், 2026 மார்ச் 1 முதல், இந்த கூடுதல் தொகைக்கு தகுதியான வயது 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இது 2012 மார்ச் 1 அல்லது அதற்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு மட்டும் பொருந்தும்….

