மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர் பதற்றம்!

அதிர்வுச் செய்தி: மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர் பதற்றம்!

இன்று சனிக்கிழமை (பெப்ரவரி 28, 2026), ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் தரப்புக்கிடையில் பாரிய மோதல் வெடித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC), வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள முக்கிய அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் (Drone) தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

 

ஈரானிய படைகளினால் இலக்கு வைக்கப்பட்டதாகக் கூறப்படும் முக்கிய தளங்கள்:

 

கட்டார் (Qatar): அல்-உடைத் (Al-Udeid) விமானப்படைத் தளம்.

 

ஐக்கிய அரபு அமீரகம் (UAE): அல்-தப்ரா (Al-Dhafra) விமானப்படைத் தளம்.

 

குவைத் (Kuwait): அலி அல்-சலேம் (Ali Al-Salem) விமானப்படைத் தளம்.

 

பஹ்ரைன் (Bahrain): அமெரிக்கக் கடற்படையின் 5-வது பிரிவு தலைமையகம் (US Navy 5th Fleet).

 

அமெரிக்காவின் பெட்ரியட் (Patriot) வான் பாதுகாப்பு முறைமைகள் பல ஏவுகணைகளை இடைமறித்து அழித்துள்ளதாகத் தெரியவருகிறது.

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் (அபுதாபி) விழுந்த ஏவுகணைச் சிதறல்களால் ஆசிய நாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தமது வான்பரப்பைத் தற்காலிகமாக மூடியுள்ளன.

 

இந்தத் தாக்குதலானது, இன்று அதிகாலை ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய ‘ஒப்பரேஷன் லயன்ஸ் ரோர்’ (Operation Lion’s Roar) எனும் தாக்குதலுக்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin