ஈரானிய மாணவியை நாடு கடத்த பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவு

ஈரானிய மாணவியை நாடு கடத்த பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சமூக ஊடகங்களில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வகையில் கருத்துகள் பதிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஈரானிய பிரஜையான மாணவியை குற்றவாளி என அறிவித்து, பிரான்ஸ் நாட்டின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி, லியோன் நகரில் வசித்து வந்த மாணவி மஹ்தியே எஸ்ஃபாண்டியாரி (Mahdieh Esfandiari) என்பவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்டனை காலம் நிறைவடைந்ததும் அவரை பிரான்ஸிலிருந்து நாடு கடத்த உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்தத் தீர்ப்பை கடுமையாக விமர்சித்த மஹ்தியே சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

 

குறித்த மாணவி 2023ஆம் ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலைப் பாராட்டும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டிருந்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு, அவர் மீது பயங்கரவாதத்தை ஆதரித்ததாக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

 

இந்த தீர்ப்பு பிரான்ஸில் சமூக ஊடகங்களில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் கருத்துகளுக்கு எதிரான கடும் நடவடிக்கையாக கருதப்படுவதுடன், கருத்து சுதந்திரம் மற்றும் தேசிய பாதுகாப்புத் தொடர்பான விவாதங்களையும் தற்போது முன்வைத்துள்ளது.

Recommended For You

About the Author: admin