பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்..!
பூநகரி பிரதேச செயலகத்தின் 2026ஆம் ஆண்டு முதலாம் காலாண்டுக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் க.இளங்குமரன் தலைமையில் இன்றைய தினம் (26.02.2026) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், பூநகரிப் பிரதேச சபை தவிசாளர், உபதவிசாளர், உறுப்பினர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலக அலுவலர்கள், கிராம அலுவலர்கள், மற்றும் பொது அமைப்புக்களின் பிரநிதிகள் என பலர் பங்குபற்றியிருந்தனர்.
இதன் போது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி பெறப்பட வேண்டிய விடயங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது, அதனைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டு செயற்படுத்தப்பட்ட அபிவிருத்தி செயற்றிடங்களின் முன்னேற்றங்கள் பரிசீலிக்கப்பட்டதுடன் 2026ஆம் ஆண்டில் செயற்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விளக்கம் வழங்கப்பட்டது.
அத்துடன் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில் கலந்துரையாடி தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகள் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எட்டப்பட்டதுடன், துறை சார் விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடி தீர்மானங்கள் எட்டப்பட்டன.



