முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விசாரனைக்கு உட்படுவாரா?
முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைதும் பின்னணியும் சிங்கள ஊடகங்களின் பார்வையும்!
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்ச் சம்பவங்கள் தொடர்பில் மிக முக்கியமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் அரச புலனாய்வுச் சேவைப் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே அவர்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.
தற்போதைய புலனாய்வு உத்தியோகத்தர்கள், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சிவில் ஒற்றர்கள் உட்பட 102 பேரிடம் ஒரு வருடத்திற்கும் மேலாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி அழைப்பு பகுப்பாய்வு அறிக்கைகள் (Phone Analysis Reports) மூலம் இவருக்கு இருந்த தொடர்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
தாக்குதல் நடைபெறப்போவது குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமை மற்றும் தாக்குதல்தாரிகளுடன் மறைமுகத் தொடர்புகளைப் பேணியமை போன்ற பலமான சந்தேகங்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் சுரேஷ் சலே என்பது குறிப்பிடத்தக்கது. அசாத் மௌலானா போன்றவர்கள் சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கிய வாக்குமூலங்களும் இந்த விசாரணையில் முக்கிய பங்கு வகித்துள்ளன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் ஆட்சியில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் வேகமெடுத்துள்ளன. இதன் அடுத்த கட்டமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அத்துடன், உயிரிழந்ததாகக் கருதப்பட்ட சாரா ஜாஸ்மின் குறித்த மரபணு (DNA) பரிசோதனை குளறுபடிகள் குறித்தும் மீண்டும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 270 உயிர்களைப் பலிகொண்ட இந்தத் துயரச் சம்பவத்திற்கு நீதி கேட்டுப் போராடும் மக்களுக்கு, இந்த கைது நடவடிக்கை ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மேலதிக விசாரணைகளின் ஊடாகப் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுரேஷ் சலே மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்:
• அரசியல் சதி: 2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஒரு கருவியாகப் பயன்படுத்தியதாகவும், அதற்கு சுரேஷ் சலே உள்ளிட்ட குழுவினர் திட்டமிட்டுச் செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
• சாட்சியங்களை மறைத்தல்: சஹரான் ஹாசிமின் மனைவி ஹாதியா மற்றும் சாரா ஜஸ்மின் தொடர்பான இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் ஆவணங்களில் பொய்யான தகவல்களை வழங்கி, சாட்சியங்களை மறைக்க ஊழல் நிறைந்த காவற்துறை அதிகாரிகளுடன் இணைந்து சலே செயற்பட்டதாகக் கூறப்படுகிறது.
• விசாரணைகளுக்கு இடையூறு: தற்போதைய குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரின் விசாரணைகளுக்குப் பலமுறை முட்டுக்கட்டை போட்டதுடன், அவர்களைப் பதவிகளில் இருந்து நீக்கவும் சலே தரப்பினர் கடுமையாக முயற்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்ப்புகள்:
சுரேஷ் சலேயிடம் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் மூலம், முன்னாள் காவற்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன போன்ற உயர் அதிகாரிகள் சாட்சியங்களை அழிப்பதற்கு எவ்வாறு உதவினார்கள் என்பது பற்றிய உண்மைகளும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த சில நாட்களில் இராணுவத்தின் இன்னும் சில உயர் அதிகாரிகள் கைது செய்யப்படலாம் என்பதால், முன்னாள் ஆட்சியாளர்கள் கடும் அச்சத்தில் இருப்பதாகத் தெரியவருகிறது. நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களுக்கு இந்த விசாரணை ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
________________________________________
English Summary: In a major breakthrough in the Easter Sunday bombing investigations, former Military Intelligence Chief Major General Suresh Sallay has been arrested in Peliyagoda. He faces allegations of orchestrating the attacks to influence the 2019 elections and conspiring with corrupt police officers to hide evidence, including forensic reports related to Sarah Jasmine and Hadiya. With Director Shani Abeysekara leading the CID probe, further arrests of high-ranking officials are expected.
#SureshSalle #EasterSundayAttack #SriLankaNews #JusticeForEasterVictims #CID #SriLankaPolitics #JaffnaNews #BreakingNews #LKA
மேலதிக விப

