மாணவர் எதிர்ப்பு : ஒக்ஸ்போர்ட் யூனியன் உரையை இழந்தார் நாமல் ராஜபக்ஷ
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற விவாதச் சங்கமான ‘ஒக்ஸ்போர்ட் யூனியனில்’ உரையாற்றுவதற்காக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இன்று நடைபெறவிருந்த இந்த உரையாடல் நிகழ்வுக்கு, ஒக்ஸ்போர்ட்பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் இந்தத் தீவிர எதிர்ப்பைத் தொடர்ந்து, நாமல் ராஜபக்ஷவின் உரையை ரத்து செய்ய ஏற்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது.
நாமல் ராஜபக்ஷ இவ்வாறு ஒரு பல்கலைக்கழக உரையை இழப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் கேம்பிரிட்ஜ் யூனியன் (Cambridge Union) அமைப்பும் அவருக்கு வழங்கியிருந்த விரிவுரை அழைப்பை ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

