ஐஸ் போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது

ஐஸ் போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது:

கொழும்பு 06 பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய சட்டத்தரணி ஒருவர், ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) போதைப்பொருளுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, கேசல்கவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த சந்தேகநபரிடமிருந்து சுமார் 130 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சட்டத்தரணி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைகாவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin