சாவகச்சேரியில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மாநாடு

சாவகச்சேரியில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மாநாடு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (DTNA முதலாவது பேராளர் மாநாடு இன்று (பிப்ரவரி 22, 2026, ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் நடைபெற்றது.

சாவகச்சேரி நகர சபையின் பொன்விழா மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாடு, கூட்டணியின் எதிர்கால அரசியல் நகர்வுகளைத் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

மாநாடானது கூட்டணியின் இணைத்தலைவர்களால் மங்கல விளக்கேற்றி உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டது.

இம் மாநாட்டில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இனைத்தலைவர்கள் கட்சியின் மாவட்ட இணைப்பாளர்கள் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இன்றைய கூட்டத்தில் தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு கட்சிக் கட்டமைப்பை அடிமட்டம் வரை கொண்டு செல்வது, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அடுத்தகட்டப் போராட்டங்கள் மற்றும் இராஜதந்திர நகர்வுகள், சிதறிக் கிடக்கும் தமிழ்த் தேசிய சக்திகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவது குறித்த ஆலோசனைகள் போன்ற பிரதான விடயங்கள் விவாதிக்கப்பட்டதாக தொிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin