கொக்குவில் இந்த கல்லூரி மாணவர் அனுமதி.. சுற்றுநிருங்களை மீறியமை அவதானிக்கப்பட்டுள்ளது.. மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு.

கொக்குவில் இந்த கல்லூரி மாணவர் அனுமதி.. சுற்றுநிருங்களை மீறியமை அவதானிக்கப்பட்டுள்ளது.. மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு.

யாழ் கொக்குவில் இந்த கல்லூரி இடைநிலை மாணவர் அனுமதியின் போது கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபங்களை மீறும் வகையில் மாணவர் அனுமதி இடம்பெற்றமை முதற்கட்ட விசாரணைகளில் அவதானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார்.

குறித்த பாடசாலையில் மாணவர் அனுமதி தொடர்பாக பெற்றோர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் குறித்த பாடசாலை இடைநிலை மாணவர் ஒருவரின் பாடசாலை அனுமதி தொடர்பில் பெற்றோரால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டபோது இடைநிலை மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் சுற்று நிருப்பங்களை மீறும் வகையில் பாடசாலை ஆதிபர் செயற்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விடையம் தொடர்பில் வலயக்கல்வி அலுவலகத்திடம் விளக்கம் கேட்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்

Recommended For You

About the Author: admin