புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் உற்சவத்திற்கான ஆலோசனைக்கூட்டம்..!
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான புளியம்பொக்கணை ஆலய வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் 25.03.2026 அன்று விளக்கு வைக்கும் வைபவத்துடன் ஆரம்பமாகும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கிளிநொச்சி, கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் உற்சவம்
எதிர்வரும் 25.03.2026 அன்று விளக்கு வைக்கும் வைபவத்துடன் ஆரம்பமாகி, 01.04.2026 அன்று பிரதான பொங்கல் உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இப் பொங்கல் உற்சவத்தினை சிறப்பாக நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு முக்கிய ஆலோசனைக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் அவர்களின் தலைமையில் 20.02.2026 நேற்றையதினம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எதிர்வரும் உற்சவ காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
பக்தர்களுக்கான போக்குவரத்து, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது பற்றியும், அரச திணைக்களங்கள் மற்றும் ஆலய நிர்வாக சபை இணைந்து திருவிழா காலப்பகுதியில் தடையற்ற சேவைகளை வழங்குவது குறித்தும் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ சிவஞானம் சிறிதரன்,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி),உதவி மாவட்டச்செயலர்,கண்டாவளைப் பிரதேச செயலாளர்,அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர்,கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர், ஆலய நிர்வாகத்தினர், திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

