வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: இருவா் கைது  

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: இருவா் கைது

ரோமேனியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றிய குற்றச்சாட்டில் இருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ரோமேனியாவில் வேலை பெற்றுத் தருவதாக 3.6 மில்லியன் ரூபாய் மோசடி செய்தவா் ஜா-எல, கடானை பகுதியல் வைத்து கைது செய்யப்பட்டுள்ளாா்.

 

ரோமேனியாவில் லொறி சாரதி (Truck Driver) வேலை பெற்றுத் தருவதாகக் கூறி களனி மற்றும் வேயங்கொடை பகுதிகளைச் சேர்ந்த இருவரிடமிருந்து இந்தத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

 

மற்றையவா் கனடாவில் தாதியர் (Nursing) வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 5.5 மில்லியன் ரூபாய் மோசடியில் ஈடுபட்டவா் நீர்கொழும்பில் (Negombo). வைத்து கைது செய்யப்பட்டுள்ளாா்.

 

 

இவ்வாறான மோசடிகளில் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:

 

நீங்கள் அணுகும் முகவர் நிலையம் பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரத்தைக் கொண்டுள்ளதா என்பதை SLBFE இணையதளத்தில் சரிபார்க்கவும்.

எக்காரணம் கொண்டும் பணியகத்தின் அனுமதி இன்றி அல்லது உத்தியோகபூர்வமற்ற முறையில் எவருக்கும் பாரிய தொகையை வழங்க வேண்டாம்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தொடர்பான சந்தேகங்கள் அல்லது புகார்களுக்கு பணியகத்தின் 1989 என்ற துரித இலக்கத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

Recommended For You

About the Author: admin