பருத்தித்துறையில் கையெழுத்துப் போராட்டம்

பருத்தித்துறையில் கையெழுத்துப் போராட்டம்

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் புதிய அனர்த்த முகாமைத்துவச் சட்டங்களுக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொது அமைப்புகள் இன்று (பெப்ரவரி 21, 2026) யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் பாரிய கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுத்தன.

 

 

 

“பயங்கரவாதத் தடைச் சட்டமும் வேண்டாம், அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டங்களும் வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் பருத்தித்துறை நகரின் மையப்பகுதியில் நடைபெற்றது.

 

போராட்டத்தின் பிரதான கோரிக்கைகளாக

 

PTA-வை முழுமையாக நீக்கு: தசாப்த காலங்களாகத் தொடரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (Prevention of Terrorism Act) உடனடியாக நீக்க வேண்டும்.

 

“பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” என்ற பெயரில் கொண்டுவரப்படும் புதிய அடக்குமுறைச் சட்டமூலத்தைக் கைவிட வேண்டும்.

 

இச்சட்டங்களின் கீழ் நீண்டகாலமாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். என்பதாகும்

 

 

வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் இணைந்து இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

 

ஜனநாயக ரீதியான கருத்துச் சுதந்திரத்தையும், மக்கள் போராட்டங்களையும் முடக்குவதற்காகவே அரசு இவ்வாறான சட்டங்களைக் கொண்டுவருவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

 

பருத்தித்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து கையெழுத்திட்டுத் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

 

Recommended For You

About the Author: admin