எப்ஸ்டீன் கோப்புகளில் 300-க்கும் மேற்பட்ட பெயர்கள் வெளியீடு! 

அதிரடித் தகவல்: எப்ஸ்டீன் கோப்புகளில் 300-க்கும் மேற்பட்ட பெயர்கள் வெளியீடு!

(Names Referenced in the Epstein Files – The evidence has not been proven.)

அமெரிக்காவின் சட்டமா அதிபர் (அட்டர்னி ஜெனரல்) பாம் போண்டி (Pam Bondi), ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பொதுமக்களின் பார்வைக்காக முழுமையாக வெளியிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட “எப்ஸ்டீன் கோப்புகளை” (Epstein Files) அமெரிக்க நீதித்துறை (DOJ) வெளியிட்டுள்ளது. இதில் சுமார் 305 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள பட்டியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

🔍 நீதித்துறை வெளியிட்டுள்ள இந்த பிரம்மாண்டமான ஆவணங்களில் சுமார் 30 லட்சம் பக்கங்களுக்கும் அதிகமான தகவல்கள், 2,000 வீடியோக்கள் மற்றும் 1,80,000 புகைப்படங்கள் அடங்கும்.

யார் இந்த 305 நபர்கள்?: எப்ஸ்டீனின் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் அவருடைய தனிப்பட்ட விமானத்தில் (Lolita Express) பயணம் செய்தவர்கள் என பல்வேறு தரப்பட்டவர்களின் பெயர்கள் இதில் உள்ளன.

இந்தப் பட்டியலில் பெயர் இருப்பதாலேயே அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று அர்த்தமல்ல. பலர் சாட்சிகளாகவோ அல்லது எப்ஸ்டீனுடன் சாதாரணத் தொடர்பில் இருந்தவர்களாகவோ இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பில் கேட்ஸ் (Bill Gates), எலான் மஸ்க் (Elon Musk), முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் டொனால்ட் ட்ரம்ப் போன்ற உலகப் புகழ்பெற்ற நபர்களின் பெயர்கள் இந்த ஆவணங்களின் வெவ்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

⚖️ பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை மறைத்து, வெளிப்படைத்தன்மையுடன் தகவல்களை வழங்க வேண்டும் என்ற “Epstein Files Transparency Act” சட்டத்தின் கீழ் இந்த ஆவணங்கள் பொதுவெளியில் விடப்பட்டுள்ளன. சில பெயர்கள் இன்னும் ‘மறைக்கப்பட்ட’ (Redacted) நிலையிலேயே உள்ளன, அவை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் உலக அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் இருப்பவர் – அமெரிக்காவின் சட்டமா அதிபர் (அட்டர்னி ஜெனரல்) பாம் போண்டி (Pam Bondi)

Recommended For You

About the Author: admin