ராஜாவை சிக்கவைத்த மந்திரி – சரிகம நிறுவன பாடல்களைப் பயன்படுத்த இளையராஜாவுக்கு நீதிமன்றம் தடை!
1971 முதல் 2001 வரை இளையராஜா இசையமைத்த, சரிகம (Saregama) நிறுவனத்திற்குச் சொந்தமான 134 படங்களின் பாடல்களை இளைய ராஜா பயன்படுத்தவோ, மேடைகளில் பாடவோ, மற்றயவர்களுக்கு உரிமத்தை கொடுக்கவோ டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இளையராஜா இசையமைத்த ஆயிரக்கணக்கான பாடல்களின் பதிப்புரிமை (Copyrights) தொடர்பாக நீண்ட காலமாக சட்டப் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, 1971 முதல் 2001 வரை வெளியான 134 திரைப்படங்களின் இசை உரிமையை சரிகம நிறுவனம் வாங்கியுள்ளது.
சரிகம நிறுவனத்தின் உரிமத்தில் உள்ள பாடல்களை, அந்த நிறுவனத்தின் அனுமதியின்றி இளையராஜா தனது கச்சேரிகளில் பாடவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.
பதிப்புரிமைச் சட்டத்தின்படி, பாடல்களின் உரிமை யாரிடம் உள்ளதோ அவர்களுக்கே அதன் வணிக ரீதியான பலன்கள் சேர வேண்டும் என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இனி வரும் காலங்களில் இளையராஜா அவர்கள் நடத்தும் இசை நிகழ்ச்சிகளில், சரிகம நிறுவனத்திடம் உள்ள குறிப்பிட்ட பாடல்களைப் பாடுவதற்கு முன் முறையான அனுமதி அல்லது ராயல்டி (Royalty) ஒப்பந்தம் அவசியமாகிறது.

