பிரிட்டிஷ் எயார்வேஸ் அதிரடி!
பிரான்ஸ், ஸ்பெய்னுக்கு வெறும் 2 பவுண்டுகளுக்கு விமானப் பயணச்சீட்டு!
பிரிட்டிஷ் எயார்வேஸ் (British Airways) விமானத்தில் பிரான்ஸ் (France), ஸ்பெய்னுக்குப் (Spain) பயணம் செய்ய வெறும் 2 பவுண்டுகள் மட்டும் செலுத்தினால் போதும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனினும், இது அனைவருக்கும் பொருந்தாது. சில நிபந்தனைகள் உள்ளன.
📢என்ன சலுகை?
2026 கோடை விடுமுறைக்காக மாட்ரிட் (Madrid), டூலோன் செயின்ட்-ட்ரோபேஸ் (Toulon Saint-Tropez) நகரங்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் விமான சேவைகளை அறிமுகம் செய்துள்ளது பிரித்தானிய எயர்வேஸ் (British Airways).
📢கட்டணம் எவ்வளவு குறைவு?
ஒரு கோப்பி அருந்துவதற்கான செலவை விடக் குறைவான கட்டணத்தில் ஸ்பெய்ன் (Spain) தலைநகர் வீதிகளில் உலாவி, பிரான்ஸ் (France) நகரத்தை கேபிள் கார் மூலம் சுற்றிப் பார்க்கலாம்.
📢எப்போது பயணம்? எங்கிருந்து?
மே மாதம் லண்டன் சிட்டி விமான நிலையத்திலிருந்து (London City Airport) இந்த விமானங்கள் புறப்படும்.
📢யாருக்கு இந்தச் சலுகை?
பிரிட்டிஷ் எயார்வேஸ் கழகத்தில் (British Airways Club) உறுப்பினராக இருக்க வேண்டும். அதுவும் உங்களிடம் Avios புள்ளிகள் இருந்தால் மட்டுமே இந்தச் சலுகையைப் பயன்படுத்த முடியும்.
📢எவ்வளவு புள்ளிகள் தேவை?
டூலோனுக்குப் (Toulon) பயணிக்க 21,500 புள்ளிகளும், மாட்ரிட்டுக்குப் (Madrid) பயணிக்க 28,000 புள்ளிகளும் தேவை. அத்துடன், 23 கிலோ செக்டு பேக்கேஜும் (Checked baggage) இலவசம்.
📢இதுவரை எத்தனை விமானங்கள்?
2023ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 16 நகரங்களுக்கு 48 Avios- புள்ளிகளின் மூலம் பிரயாண சீட்டுக்களை கொள்வனவு செய்யக்கூடிய விமானங்களை பிரித்தானிய எயர்வேஸ் (British Airways) இயக்கியுள்ளது.
📢யார் சொன்னது?
“எமது வாடிக்கையாளர்களுக்கு இவ்வாறான சலுகைகளை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்” என பிரிட்டிஷ் எயார்வேஸ் (British Airways) அதிகாரி கோல்ம் லேசி (Colm Lacy) தெரிவித்துள்ளார்.

