ஈரானுடனான (Iran) அமெரிக்க (US) ஒப்பந்தம்! அணு ஆயுத உள்கட்டமைப்பை அகற்ற நெதன்யாகு (Netanyahu) வலியுறுத்தல்
ஈரானுடனான (Iran) எந்தவொரு அமெரிக்க (US) ஒப்பந்தமும், ஈரான் (Iran) அணு ஆயுத உள்கட்டமைப்பை அகற்றுவதை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று இஸ்ரேலிய (Israeli) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க (US) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் (Donald Trump) இதனை வலியுறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க (US) யூத அமைப்புகளின் வருடாந்திர மாநாட்டில் பேசிய நெதன்யாகு (Netanyahu), காசாவில் (Gaza) உள்ள அனைத்து சுரங்கங்களையும் அழிக்கும் பணியை இஸ்ரேல் (Israel) இன்னும் “முடிக்க வேண்டும்” என்றார். மதிப்பிடப்பட்ட 500 கி.மீ தூரத்தில் 150 கி.மீ தூரத்தை இஸ்ரேல் (Israel) ஏற்கனவே அகற்றிவிட்டதாக அவர் கூறினார்.
அமெரிக்காவுக்கும் (US) ஈரானுக்கும் (Iran) இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
ஈரான் (Iran) செறிவூட்டும் செயல்முறையை நிறுத்தினால் மட்டும் போதாது, அதற்கான உபகரணங்களையும் அகற்ற வேண்டும் என்று நெதன்யாகு (Netanyahu) கூறியுள்ளார். செறிவூட்டும் திறன் இருக்கக்கூடாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா (US) வழங்கும் இராணுவ உதவியை நிறுத்த இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா (US) தற்போது இஸ்ரேலுக்கு (Israel) ஆண்டுக்கு 3.8 பில்லியன் டாலர் இராணுவ உதவி அளித்து வருகிறது.
இந்த உதவி பெரும்பாலும் அமெரிக்காவில் (US) உபகரணங்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதனை படிப்படியாக குறைக்க இஸ்ரேல் (Israel) விரும்புகிறது.
வளமான பொருளாதாரம் காரணமாக இந்த முடிவை எடுக்க முடியும் என்று நெதன்யாகு (Netanyahu) கூறியுள்ளார்.
அமெரிக்காவுடன் (US) உதவி என்ற நிலையிலிருந்து கூட்டாண்மை என்ற நிலைக்கு நகர விரும்புவதாக நெதன்யாகு (Netanyahu) தெரிவித்துள்ளார்.

