“கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!”

“கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!” – மார்ச் 1 முதல் புதிய Carnet de maternité!

பிரான்ஸ் அரசாங்கம் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கும் Carnet de maternité (மகப்பேறு குறிப்பேடு) வரும் மார்ச் 1-ம் தேதி முதல் புதிய வடிவம் பெறுகிறது. Haut conseil de la santé publique (பொதுச் சுகாதார உயர் சபை) வழங்கிய புதிய பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் முதல் மருத்துவப் பரிசோதனையை (Examen prénatal) முடித்தவுடன், இந்த ஆவணம் அவர்களுக்கு இலவசமாக (Gratuitement) வழங்கப்படும். தாயும் சேயும் நலமாக இருக்கத் தேவையான அனைத்துத் தகவல்களும், மருத்துவ ஆலோசனைகளும் இதில் இடம்பெற்றிருக்கும்.

 

புதிய புத்தகத்தில் என்ன சிறப்பு?

இந்த முறை Dépression post-partum (பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு) குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

காரணமே இல்லாமல் சோகமாக இருப்பது.

 

ஞாபக மறதி.

 

குழந்தை குறித்துத் தேவையற்ற பயம் (Angoisses).

இவை போன்ற அறிகுறிகள் இருந்தால், அதை எப்படி எதிர்கொள்வது மற்றும் யாரிடம் உதவி கேட்பது என்பது பற்றிய தெளிவான ஆலோசனைகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

 

மேலும், இந்தப் புதிய பதிப்பில் பின்வரும் விவரங்களும் இணைக்கப்பட்டுள்ளன:

 

கர்ப்ப காலத்தில் போட வேண்டிய Vaccinations (தடுப்பூசிகள்).

 

Trisomie 21 (மரபணுக் கோளாறு) பரிசோதனை விவரங்கள்.

 

Diabète gestationnel (கர்ப்பகால நீரிழிவு) பரிசோதனை.

 

இந்தக் குறிப்பேடு ஐந்து முக்கியப் பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கர்ப்பம் உறுதியானது முதல், பிரசவம் முடிந்து வீட்டிற்குத் திரும்பும் வரை செய்ய வேண்டியவைகள், பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தொடர்புகொள்ள வேண்டிய அதிகாரிகளின் விவரங்கள் இதில் இருக்கும்.

 

பிரசவம் முடிந்து சில வாரங்கள் வரை, ஒவ்வொரு முறை மருத்துவரைச் சந்திக்கச் செல்லும்போதும் (Consultation médicale), இந்தக் குறிப்பேட்டைக் கையில் எடுத்துச் செல்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin