யாழ் வழுக்கை ஆற்றில் ஆய்வு ஒன்றினை மேற்கொண்ட மருத்துவ பீட மாணவர்கள்..!

யாழ் வழுக்கை ஆற்றில் ஆய்வு ஒன்றினை மேற்கொண்ட மருத்துவ பீட மாணவர்கள்..!

யாழ்ப்பாணத்தில் வழுக்கியாற்றைப் புனரமைப்பு செய்து நிலத்தடி நீர்த் தேவை மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஆய்வு ஒன்றினை யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் இன்று ஆரம்பித்தனர்.

யாழ்ப்பாணம் வறுத்தலைவிளான் பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பிக்கும் வழுக்கையாற்றில் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், அரச திணைக் களத்தை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த ஆராய்ச்சி பயணத்தில் வருத்தலைவிளான் பகுதியில் ஆரம்பிக்கும் வழுக்கையாற்று பயணம் அராலியில் முடிவடையவுள்ளது.

இதன்போது பொறியியலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மருத்துவ பீடம் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin