வவுனியா மாட்டு இறைச்சி கொல் களத்தின் சுகாதாரமற்ற நிலமை..!

வவுனியா மாட்டு இறைச்சி கொல் களத்தின் சுகாதாரமற்ற நிலமை..!

நடவடிக்கை எடுப்பார்களா சம்மந்தப்பட்ட அதிகாரிகள்.

நீங்கள் கடைகளில் வாங்கி உண்ணும் மாட்டிறைச்சிதான் இது.

எவ்வளவு சுகாதாரமற்ற முறையில் பரவிக்கிடக்கிறது பாருங்கள்.

சாதாரண பெட்டிக்கடை ஷோகேசில் ஒரு இலையான் இருந்தால் கடையை மூடு என்று சட்டம் பேசும் PHI மார் இந்த கன்றாவித்தனமான இறைச்சி வெட்டும் இடங்களை மட்டும் சுகாதாரமானது எனது சான்றிதழ் கொடுப்பார்கள்.

வவுனியா மாடறுக்கும் கொல் களத்தில் மாட்டிறைச்சி இவ்வாறுதான் சுத்தம் சுகாதாரம் இல்லாமல் பேணப்படுகின்றது.

இன்றைய தினம் வவுனியா மாநகர சபை பிரதிமேயர் கார்த்தீபன் களத்திற்கு சென்று பார்வையிட்டபோதுதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது இவை.

இந்த கொல்களத்தை சுகாதாரமுறைப்படி பேணவேண்டியதும் இங்கு அறுக்கப்படும் இறைச்சிகள் சுகாதாரமாக மக்களிடம் கொண்டுசெல்லப்படவேண்டும் என்பதிலும் கவனமெடுக்கவேண்டியது யார்?

Recommended For You

About the Author: admin