திருகோணமலையில் இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாச்சார இசை நிகழ்ச்சி..!

சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய மட்ட கலாச்சார இசை நிகழ்ச்சி இன்று (20) திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் தலைமையில் மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

முதற்கட்டமாக கிழக்கு மாகாண மட்ட போட்டிகள் திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலுள்ள மாற்றுத்திறனாளிகள் சமூக சேவைகள திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தலைப்புகளுக்கு அமைவாக போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றினர்.

இப்போட்டி நிகழ்வில் திருகோணமலை மாவட்டம் முதலாம் இடத்தை பெற்றதுடன் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட சமூக சேவைகள் இணைப்பாளர் த. பிரணவன், கோமரங்கடவெல உத்தியோகத்தர் அ.செல்வகுமார், குச்சவெளி உத்தியோகத்தர் ம. குகதாசன், பட்டினமும் சூழலும் உத்தியோகத்தர் கௌரிதாஸ், மட்டக்களப்பு மற்று மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சமூக சேவைகள் இணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin