திருகோணமலைக்கு வந்த பிரம்மாண்டமான சுற்றுலா கப்பல்..!
திருகோணமலைக்கு 550 சுற்றுலாப் பயணிகளுடன் எம்.வி கிறிஸ்டல் சிம்போரி என்ற கப்பல் இன்று (23) திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்தது.
இந்தக் கப்பலில் அவுஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பிரவேசித்தனர்.
திருகோணமலையை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகள் திருகோணமலை, சீகிரியா, ஹபரான போன்ற இடங்களை பார்வையிடவுள்ளனர். இந்தக் கப்பலில் 497 பணிக்குழாமினரும் அடங்குகின்றனர்
இந்நிலையில் கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா மையமான திருகோணமலைக்கு இந்த சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளமையானது சுற்றுலாத் துறைக்கு பெரும் உந்துசக்தியாக அமையும் என சுற்றுலாத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

