காரைதீவின் 1ம் பிரிவு கிராம சேவகர் கஜேந்திரன் தலைமையில் சிரமதானம்
நேற்றைய தினம் எமது இலங்கையின் 78வது சுதந்திர தினத்தையொட்டி பல நிகழ்வுகள் இடம்பெற்றன அந்த வகையில்
“எங்களால் முடியும்
அழகான கடற்கரையின் பங்குதாரராகுங்கள்”எனும் தொனிபொருளுக்கு இணங்க கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைவாக காரைதீவு 1ம்பிரிவு கிராம சேவகர் கஜேந்திரன் தலைமையில் கிராமசேவகர் காரியாலயத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இப்பிரினரால் ஆலயத்தில் சிரமதானமும் நடைபெற்றன.
அத்தோடு இன்றைய தினம் (15) காரைதீவு முதலாம் பிரிவின் கண்ணகி முதியோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் காரைதீவு சுவாட் அமைப்பினரின் பங்குபெற்றலுடன் கடற்கரை பகுதியில் வீசப்பட்டு காணப்பட்ட பிளாஷ்டிக் மற்றும் றெஜிபோம் வகைகளை சேகரித்து பிரதேச சபையினரின் வாகன உதவியுடன் அப்பகுதியை தூய்மை படுத்தினார்கள்.
காரைதீவு பிரதேச செயலாளர் அருணன் இவ் நடைமுறைகள் அனைத்திற்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது. கிராம உத்தியோகத்தர் காரைதீவு ஒன்று


