கிழக்கு மாகாண இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளராக ஆல்தீன் அமீர் நியமனம்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (NYS) கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஆல்தீன் அமீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மூவின இளைஞர் யுவதிகளின் கல்வி, கலை, கலாசாரம் மற்றும் விளையாட்டு துறைகளில் தலைமைத்துவ வளர்ச்சியை முன்னெடுத்து சிறப்பாக பணியாற்றி வந்த அவர், இதற்கு முன்னர் கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளராகவும், யூத் அலியன்ஸ் ஸ்ரீலங்கா இளைஞர் அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகராகவும் கடமையாற்றி வந்தார்.
இறக்காமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சிரேஷ்ட அதிகாரியான ஆல்தீன் அமீர், கிழக்கு மாகாண இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளராக திருகோணமலையில் அமைந்துள்ள அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்நியமனத்தை முன்னிட்டு வரிப்பத்தான்சேனை மக்கள்சார்பில் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமிதம் அடைவதாக இறக்காமம் பிரதேச சபை உறுப்பினரும் முன்னாள் உப தவிசாளருமான என்.எம். ஆஷிக் தெரிவித்துள்ளார்.

