மன்னார் சாந்திபுரம் பகுதியில் காணாமற் போன வயோதிபர் சௌத்பார் கடற்பரப்பில் சடலமாக மீட்பு.

மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் மிதந்து வந்த சடலம் ஒன்றினை இன்று (30.12) திங்கள், காலை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

மீனவர்கள் கடற்படையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்ட கடற்படையினர் சௌத்பார் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் ராசு (வயது-59) என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டார்.

இக்குடும்பஸ்தர் கடந்த 28 ஆம் திகதி முதல் காணாமல் போன நிலையில், உறவினர்கள் இவரைத் தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில் கூலித்தொழிலாளியான குறித்த நபர் இன்றைய தினம் (30)மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: ROHINI ROHINI