மாவையின் தலைமைப் பதவியை காப்பாற்ற நீதிமன்றத்தில் வழக்கு : தொடரும் பதவி சண்டைகள்!

மாவையின் தலைமைப் பதவியை காப்பாற்ற நீதிமன்றத்தில் வழக்கு : தொடரும் பதவி சண்டைகள்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்து மாவை சேனாதிராஜா அனுப்பிய கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கும் நிலையில், அந்தக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படுவதைத் தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
மாவை சேனாதிராஜாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பான வாக்கெடுப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் அதை இடைநிறுத்தி தடை உத்தரவு பிறப்பிக்கவும், மாவை சேனாதிராஜா தொடர்ந்து கட்சியின் தலைவராக பதவி வகிக்கவும் உத்தரவிடக் கோரி இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது.

Recommended For You

About the Author: admin