அஸ்வெசும பயனாளிகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளை வரவு வைப்பதற்கு வங்கிக் கணக்கு இல்லாத பயனாளிகளை வங்கிக் கணக்கு திறக்குமாறு நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

அஸ்வெசும முதல் கட்டத்தில் தகுதி பெற்ற சுமார் 6,000 பேர் வங்கிக் கணக்குகளைத் திறக்காததால் கொடுப்பனவுகளை பெறவில்லை சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் வங்கிக் கணக்குகளை திறக்க முடியாத மக்களும் அதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் வங்கிக் கணக்குகளை திறப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும், வங்கிக் கணக்கு இல்லாத பயனாளிகள் 27ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலகத்தில் இருந்து கடிதத்தைப் பெற்று வங்கிக் கணக்குகளை திறக்குமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin