பலாலி வடக்கு ஸ்ரீ இராஜரஜேஸ்வரி அம்மன் ஆலயம் 34 வருடங்களின் பின்னர் மக்களின் வழிபாட்டுக்கு இன்று முதல் தினசரி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள இந்த ஆலயம் உட்பட 6 ஆலயங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று முதல் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜரஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினசரி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆலயத்துக்கு செல்பவர்கள் ஏற்கனவே சென்று வந்த பாதையூடாக செல்ல முடியும் .
Images- Sathiyaseelan Somasundaram