2024 பாலன் டி’ஓர் விருது: முதல் முறையான மான்செஸ்டர் சிட்டி வீரர் வெற்றி

2024 பாலன் டி’ஓர் விருதை மான்செஸ்டர் சிட்டி மற்றும் ஸ்பெயின் அணியின் மிட்ஃபீல்டர் ரோட்ரி வெற்றிகொண்டுள்ளார்.

சர்வதேச கால்பந்து உலகில் மிகவும் உயரிய விருதாக ‘பாலன் டி’ஓர் விருது’ கருதப்படுகிறது.

இந்நிலையில், 68வது பாலன் டி’ஓர் விருது வழங்கும் விழா திங்கள்கிழமை மாலை பாரிஸில் உள்ள தியேட்டர் டு சாட்லெட்டில் நடைபெற்றிருந்தது.

இதில் 2023-24 பருவத்தில் மான்செஸ்டர் சிட்டி மற்றும் ஸ்பெயின் அணிகள் பெரும் பட்டங்களை வெற்றிகொள்ள காரணமாக இருந்த ரோட்ரி, ரியல் மெட்ரிட்டின் வினிசியஸ் ஜூனியரை பின்தள்ளி மதிப்புமிக்க விருதை வென்றார்.

இதன் மூலம், 2008ஆம் ஆண்டு கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பின்னர் இந்த விருதை வெற்றிகொண்ட முதல் பிரீமியர் லீக் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

மான்செஸ்டர் சிட்டியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வீரர் பாலன் டி’ஓர் விருதை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

இங்கிலாந்திலிருந்து கடந்த காலங்களில் பிளாக்பூல், மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் லிவர்பூல் அணிகளின் வீரர்களே இந்த விருதை பெற்றிருந்தனர்.

ரோட்ரி ஏன் பலோன் டி’ஓரை வென்றார்?

2023-24 பருவத்தில், எஃப்ஏ கிண்ணத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்தபோது, மான்செஸ்டர் சிட்டி பிரீமியர் லீக் பட்டத்தை வெல்ல ரோட்ரி காரணமாக இருந்தார்.

மேலும், ஜேர்மனியில் இடம்பெற்ற யூரோ 2024 கிண்ணத்தை ஸ்பெயின் அணி வெற்றிகொள்ள உதவியது அவரது மிகப்பெரிய சாதனையாகும்.

ரொனால்டோ – மெஸ்ஸியின் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை

முதல் முறையாக கால்பந்து ஜாம்பவான்களாக மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்படாதது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கால்பந்தில் பரம போட்டியாளர்களாக வலம் வரும் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோகடந்த 16 ஆண்டுகளில் 13 முறை இந்த விருதை வென்றுள்ளனர்.

இந்த ஆண்டு மதிப்புமிக்க விருதை வெல்ல மெஸ்ஸி அல்லதுரொனால்டோ ஆகிய இருவரின் பெயரும் பரிந்துரைக்கப்படவில்லை என்பது பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

தங்களது உச்சத்தில், மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இருவரும் இருந்த போது, ஐரோப்பிய கால்பந்தின் இரண்டு சூப்பர் கழகங்களான பார்சிலோனா மற்றும் ரியல் மெட்ரிட் ஆகிய அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin